Tuesday 10 February 2015

பதிவுலக பிரம்மா திரு கோபு சாரின் பதிவில் நான்...

My Photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, February 4, 2015

அன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் !




மிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும்
பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின்
வருகை மிகவும் மகிழ்வளித்தது.  

29.01.2015 குருவாரம் .. வியாழக்கிழமை
மாலை 5.45 க்கு எங்கள் இல்லத்தில் 
வரவேற்பு அளித்தோம்.
பிரபல எழுத்தாளருக்குப் 
பொன்னாடை போர்த்தி வரவேற்றல்
 தம்பதி ஸமேதராய் எழுந்தருளியது 
எங்களுக்கு மேலும் மிக்க மகிழ்ச்சியளித்தது.
 திருமதி. ராதா அவர்களின் கணவர் 
திரு. பாலு அவர்கள் 
அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றினில் 
மேலாளராகப் பணியாற்றி
ஓய்வு பெற்றவர்.

ஜாதகத்தின் அடிப்படையில் பலாபலன்கள்
சொல்வதிலும் ஆற்றல் படைத்தவர்.

இவரது ஜோதிட ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்க

https://scribd.com/yenbeeyes
அவர்களுடன் நாங்களும் 
 
உருவத்தில் மட்டுமல்ல ...... உள்ளத்திலும், 
பாசத்துடன் பழகுவதிலும், 
எழுத்தாற்றலிலும் 
எப்போதும் இளமையாக + இனிமையாகத் 
தோற்றமளிப்பதிலும்

மிகவும் உயர்ந்து நிற்பவர்
திருமதி. ராதாபாலு அவர்கள்.
சமீபத்தில் காசியாத்திரை சென்று வந்து
எங்களுக்கு அள்ளித்தந்துள்ள அன்பளிப்புகள் இதோ:
 ஜொலிக்கும் ஸ்ரீ லக்ஷ்மி + கணேஷ்
வழவழப்பானதோர் பிள்ளையார்
கலை நுணுக்கமான ஆசனத்தில் அமர்ந்த நிலையில் 
 
அன்னபூரணி அம்பாள்            ஸ்ரீ காசி விஸ்வநாதர் 
                     
 கங்கைச்சொம்பு                               ஸ்ரீ விஷ்ணு பாதம்
 காசி அன்னபூரணி அம்பாள் 
படியளக்கும் பரமசிவனுக்கே 
அன்னமிடும் அழகிய படம் 

 
 கலை நயம் மிக்க ஊதுபத்தி ஸ்டாண்ட் + காசிக்கயிறுகள்
                           
கலைநயம் மிக்க மிக அழகானதோர் குங்குமச்சிமிழ்
 
 பார்க்கவே பரவஸம் 
அளிக்கும் அடிபாகம் :)

[அதாவது சோழி போன்ற வடிவமைப்பில் குங்குமச் சிமிழின் அடிபாகம்]



ரவிக்கைத்துணிகள், மஞ்சள், குங்குமம்
கண்ணாடி, சீப்பு முதலிய மங்கலப்பொருட்கள் 



NEW DIARY FOR 2015






இவர்களின் சொந்தத் தோட்டத்தில் 
விளைந்த மிகவும் ருசியான கொய்யாப்பழங்கள் !

 
 ஆஹா!  நா ஊறவைக்கும் ஜாங்கிரிகளும்
கரகரப்பான காராச்சேவும்
மற்ற அனைத்துப்பொருட்களையுமே 
தூக்கிச் சாப்பிட்டு விடும் விதமாக ! :)

புதிதாகக் காசிக்கயிறு கட்டிய என் கையில் 
ஜொலிக்கும் காசி விஸ்வநாதர்
புதிதாகக் காசிக்கயிறு கட்டிய என் கையில் 
ஜொலிக்கும் அன்னபூரணி அம்பாள் 
 
புதிதாகக் காசிக்கயிறு கட்டிய என் கையில் 
புத்தம் புதிய கங்கைச்சொம்பு

-oOo-


 





சமீபத்தில் மேற்கொண்ட புனித யாத்திரையில்
காசியில் காட்சியளிக்கும் 
தம்பதியினர்
 

புத்தகங்களைப் படிப்பதும், அறிந்தவற்றையும், 
அனுபவங்களையும் எழுதுவதும் 
திருமதி. ராதாபாலு அவர்களுக்கு 
மிகவும் பிடித்தமான விஷயங்கள்.


கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக 

இவர்கள் எழுதிய 
கதைகள், கட்டுரைகள், ஆலய தரிசனம், 
சமையல் குறிப்புகள் ஆகியவை 
பல தமிழ் இதழ்களில் 
வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.  



 



சமீபத்திய ’தீபம்’ இதழில் இவரின் பல 
ஆன்மீகக் கட்டுரைகளும் 
’தி ஹிந்து’ தமிழ் தினசரியிலும், மங்கையர் மலரிலும் 
வேறு சில ஆக்கங்களும் வெளியாகியுள்ளன.

தமிழ் இதழ்களில் வெளியான அவற்றின் தொகுப்புக்களை தன் 

வலைப்பூக்களிலும் இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.  



பேரெழுச்சியுடன் அடிக்கடி 
உலகில் உள்ள பல நாடுகளுக்குப்
பயணம் சென்று வருவதில் 
மிகுந்த ஆர்வமுள்ள தம்பதியினராக உள்ளனர் !
இதோ அதற்கு ஆதாரமான சில படங்கள்:

இந்தோனேஷியா - ’பாலி’யில் 

கம்போடியாவில்

ஜெர்மனிக் குளிரில்

லண்டன் பாலம் அருகே

மலேசியாவில் 


’ பாரிஸ்’  இல்
 ’ரோம்’ இல் 

சிங்கப்பூரில்  

லண்டன் வாக்ஸ் மியூசியத்தில் 
'ஸ்விஸ்' நாட்டில்
 பாங்காக் - தாய்லாந்தில்
பளிச்சென்ற தோற்றத்தில் !


கேரளாவில்

பேத்தியுடன்

 பசுமையான 
நினைவுகளில் !

 பூக்களுடன் தானும் 
ஓர் பூவாகவே !


உல்லாசமாகப் 
படகுப் பயணத்தில் 


 
செல்லமான பேத்தியுடன் !

பாட்டியின் அலங்காரங்களில் சொக்கிப்போய்
கன்னத்தில் எவ்ளோ அழகாக ஸ்டைலாகக் 
கை வைத்துக்கொண்டுள்ளது பாருங்கோ !
பேரக்குழந்தைகளுடன் 
உற்சாகமாக ஊஞ்சலில்


சஷ்டியப்த பூர்த்தி விழாவில் !




உன்னதமான இந்த உத்தம தம்பதியினருக்கு 
மூன்று பிள்ளைகளும் ஒரு பெண்ணுமாக 
மொத்தம் நான்கு வாரிசுகள். 

அனைவருக்கும் திருமணமாகி 
இவர்கள் பேரன் பேத்திகள் எடுத்தாச்சு!

ஜெர்மனி, 
சிங்கப்பூர், 
சென்னை, 
மும்பையில் 
அவர்கள்.

அடிக்கடி இங்குமங்கும் 
பயணம் செய்துகொண்டு
திருச்சியில் ஜாலியாக இவர்கள் ! :)

 

பதிவுலகில் நம் 
திருமதி. ராதாபாலு அவர்களின் 
சமீபத்திய சாதனைகள்




திருமதி. ராதாபாலு அவர்கள்.

வலைத்தளங்கள்: 


” எண்ணத்தின் வண்ணங்கள் ”


“அறுசுவைக் களஞ்சியம் ”


“ என் மன ஊஞ்சலில் “


சென்ற ஆண்டு என் வலைத்தளத்தினில் நான் நடத்திய 

‘சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ மூலம் மட்டுமே 

எனக்கு இவர்கள் அறிமுகம் ஆனார்கள்.



இப்போது நாங்கள் குடும்ப நண்பர்களாகிவிட்டதில் 

எங்கள் இருவருக்குமே மிகவும் மகிழ்ச்சி.



VGK-07, VGK-08, VGK-10, VGK-11, VGK-12, 

VGK-14, VGK-17, VGK-18, VGK-27, 

VGK-28 and VGK-33 

ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்று

நான்கு முதல் பரிசுகள், 

நான்கு இரண்டாம் பரிசுகள், 

மூன்று மூன்றாம் பரிசுகள்

வென்றுள்ளார்கள்.




                                                                   http://gopu1949.blogspot.in/2014/08/vgk-21-to-vgk-30.html

                                                                   http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html




தனக்குத்தானே நீதிபதி போட்டியிலும் 

மிகச்சரியாக விடை எழுதி 

பரிசினைப் பகிர்ந்து கொண்டார்கள்




இவருக்கு நம் போட்டிகளில்

’கீதா விருது’ 

வழங்கப்பட்டுள்ளது.




VGK-10, VGK-11 and VGK-12

தொடர் வெற்றிக்காக

ஹாட்-ட்ரிக் பரிசும் அளிக்கப்பட்டுள்ளது.







திருமதி. ராதாபாலு அவர்களை 


நான் கடந்த நான்கு மாதங்களில்


மூன்று முறைகள் நேரில் 


சந்தித்திருக்கிறேன்.






முதல்முறை அவர்கள் வீட்டு


நவராத்திரி கொலுவுக்கு 


எங்களை அழைத்தபோது



30.09.2014




இவர்களின் வீட்டை படுசுத்தமாகப் 

பளிச்சென்று பராமரித்து

மிக அழகாக வைத்திருந்தார்கள்.


அதைக்கண்ட என் கண்களுக்கும் மனதுக்கும் 

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


{ அந்த  மிக ரம்யமான சூழலிலிருந்து புறப்பட்டு வரவே எனக்குத் தோன்றவில்லை .

இதனாலேயே அவர்களை என் இல்லத்திற்கு அழைக்க நான் மிகவும் தயங்கினேன். }


அழகியலும் அறிந்துள்ள 


மிகவும் பொறுப்பான 


குடும்பத்தலைவி ! :)






இரண்டாம் முறை பொதுவான ஓரிடத்தில்


எதிர்பாராததோர் சந்திப்பு 


எங்களுக்குள்  நிகழ்ந்தது



16.01.2015



மூன்றாம் முறை 


29.01.2015 


எங்கள் இல்லத்திற்கே


நேரில் வந்திருந்தார்கள்.


 
ஒவ்வொருமுறை நான் இவர்களை சந்திக்கும்போதும் 

ஒரு 10 வயது குறைந்ததுபோலக் காட்சியளிப்பதே

இவர்களின் ஸ்பெஷாலிடியாகவும்

எனக்கு ஒரே ஆச்சர்யமாகவும் 

அதே சமயம் மிகவும் சந்தோஷமாகவும் உள்ளது. :) 



இவ்வாறான இவர்களின் 

இளமையின் இரகசியத்தை இவர்கள்

தனிப்பதிவாக வெளியிட்டால்

நம்மில் பலருக்கும் பயன்படக்கூடும் :)






 


அன்பின் ராதாபாலு,




எங்கள் இல்லத்திற்கு 

தங்களின் அன்பான வருகைக்கும்,

மிகவும் இனிமையாக நாம் 

மனம் விட்டுப் பேசி மகிழ முடிந்ததற்கும்

எங்கள் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.



இன்றுபோல என்றுமே சந்தோஷமாக 





சிரித்த முகத்துடன் கலகலப்பாக இருங்கோ !






என்றும் அன்புடன் தங்கள்


கோபு
 
 
 
 
கோபு சார்....தங்களின் பதிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்....

No comments:

Post a Comment